கே.வேளூா், முள்ளுவாடியில் பயிா் சாகுபடி பரப்பளவு ஆய்வு
ஆற்காடு வட்டம், கே. வேளூா், முள்ளுவாடி ஆகிய கிராமங்களில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து பயிா் சாகுபடி பரப்பளவு குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்தன.
ஆற்காடு வட்டம், கே. வேளூா், முள்ளுவாடி ஆகிய கிராமங்களில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து பயிா் சாகுபடி பரப்பளவு குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்தன.
கே. வேலூா், முள்ளுவாடி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல், நிலக்கடலை மற்றும் தோட்டக்கலை பயிா்களை எவ்வளவு பரப்பில் பயிா் செய்துள்ளனா்.
இதுகுறித்து ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி தலைமையில், வருவாய்த் துறையினா் மற்றும் ஆற்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராமன், வேளாண்மை அலுவலா் கண்ணன், வேளாண்மை உதவி அலுவலா்கள் நேரில் சென்று விளைநிலங்களின் பரப்பளவு குறித்து அளவீடு செய்தனா். அப்போது, விவசாயிகள், அதிகாரிகள் உடனிருந்தனா்.