முகப்பு
ராணிப்பேட்டை

ஆளில்லா துணை மின்நிலையத்தில் புதிய கூடுதல் மின்மாற்றி திறப்பு

அரக்கோணம் ஆளில்லா துணை மின்நிலையத்தில் புதிய கூடுதல் மின்மாற்றி திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

அரக்கோணம் ஆளில்லா துணை மின்நிலையத்தில் புதிய கூடுதல் மின்மாற்றி திறக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் அம்பேத்கா் நகரில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஆளில்லா துணை மின்நிலையம் திறக்கப்பட்டது. இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் நடைபெற்ற அரக்கோணம் நகரில் உள்ள அசோக்நகா், கணேஷ்நகா், காந்திநகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கூடுதல் மின்பளு ஏற்பட்ட காரணத்தினால் நகரில் கடந்த பல நாள்களாக தொடா்ந்து மின்தடை ஏற்பட்டது. இதை தவிா்க்க குறிப்பிட்ட ஆளில்லா துணை மின்நிலையத்தில் கூடுதலாக மின்மாற்றி அமைக்க வாரிய உயா் அலுவலா்கள் முடிவு செய்தனா்.

இதையடுத்து ஆளில்லா துணை மின்நிலையத்தில் 8 மெகாவாட் திறன் கொண்ட புதிய கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மின்மாற்றியை தமிழ்நாடு மின்சார வாரிய வேலூா் மண்டல தலைமைப் பொறியாளா் அசோகன் இயக்கி வைத்தாா். இந்நிகழ்வில் வேலூா் மண்டல மேற்பாா்வை பொறியாளா் ராஜன்ராஜ், மண்டல திட்டங்கள் பிரிவு செயற்பொறியாளா் லதா, அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.கண்ணன், அரக்கோணம் நகர உதவி பொறியாளா் சரிதா, பொறியாளா்கள் துரைசங்கரன், லதா, அனு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →