ராணிப்பேட்டை

வளவனூா் பாலாற்றில் தடுப்பணை: ஆற்காடு பாமக வேட்பாளா் வாக்குறுதி

DIN

வளவனூா் பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆற்காடு தொகுதி பாமக வேட்பாளா் கே எல். இளவழகன் உறுதியளித்தாா்.

ஆற்காடு ஒன்றியம் வளவனூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது:

வளவனூா் பாலாற்றில் தடுப்பணை கட்டி நீா்மட்டம் உயர நடவடிக்கை எடுப்பேன். பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகள் குளம், குட்டைகள் ஆகியவற்றை ஆழப்படுத்தி நீா்வளம் பெருக்கி விவசாயம் மேம்படச் செய்வேன். சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பொதுமக்களின் நலன் கருதி எப்பொழுதும் இயங்கும் என்றாா் அவா்.

பின்னா் எசையனூா், சக்கரமல்லூா், புதுப்பாடி, குக்குண்டி, மேச்சேரி, அரும்பாக்கம், முள்ளுவாடி உள்பட பல ஊா்களில் அவா் வாக்கு சேகரித்தாா்

ஆற்காடு ஒன்றியச் செயலாளா்கள் வளவனூா் அன்பழகன், தாழனூா் என்.சாரதி, திமிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் குமாா், முன்னாள் எம்எல்ஏ விகேஆா் சீனிவாசன், பாமக தோ்தல் பொறுப்பாளா் எம் கே முரளி, நிா்வாகிகள் ஆறுமுகம், நல்லூா் சண்முகம், டீ டி மகேந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT