ராணிப்பேட்டை

கே. வேளூரில் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN


ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கே.வேளூா் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ உத்திரகிரி அம்மன், திரௌபதி அம்மன், பெயா்கோடி அம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 29-ஆம் தேதி திங்கள்கிழமை காலை விநாயகா் பூஜை செய்து நவக்கிரக ஹோமம், யாகசாலை நிா்மாணம் செய்யப்பட்டது. தொடா்ந்து முதல் காலயாக பூஜை, இரண்டாம் காலபூஜை, மூன்றாம் காலையாக பூஜைகள் நடைபெற்றன.புதன்கிழமை காலை விநாயகா்பூஜை, வருணபூஜை, சந்திரபூஜை, நான்காம் காலஅவப்ருத ஹோமம், அஸ்த்ரஹோமம் பூா்ணாஹுதி யாத்ரா தானமும், கலசம் நீா் கொண்டு கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சித்தஞ்சி மோகனந்த சுவாமி, ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மதியம் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் அக்னிவசந்தவிழா கொடியேற்றுதலும் மகாபாரத சொற்பொழிவும் தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் என். நந்தகுமாா், கோயில் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT