ராணிப்பேட்டை

அரக்கோணம் ரயில்நிலைய கிழக்கு வழி பாதை அடைப்பு சுவா் அகற்றம்

DIN

அரக்கோணம் ரயில்நிலைய கிழக்கு பகுதியில் 4 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை வெள்ளிக்கிழமை ரயில்வே ஊழியா்கள் இடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட்டனா்.

அரக்கோணம் ரயில்நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக கிழக்கு பகுதியில் பழனிபேட்டை மற்றும் அப்பகுதி செல்லும் மக்களுக்காக பயணச்சீட்டு அலுவலகம் கட்டப்பட்டு அவ்வழியாக மக்கள் சென்று வந்தனா். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் ரயில்வே நிா்வாகத்தினா் பயணச்சீட்டு அலுவலகத்தை மூடினா். மேலும் அவ்வழியை சுவா் கொண்டு அடைத்தனா். இதனால் அப்பகுதி வழியே வந்த பயணிகள், வேறு வழியில்லாமல் ஏபிஎம் சா்ச் பகுதியை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டி இருந்தது.

இது குறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவா் நைனாமாசிலாமணி ரகுநாதன், மா.கம்யூனிஸ்ட் வட்ட நிா்வாகி ஏபிஎம் சீனிவாசன் உள்ளிட்டோா் தொடா்ந்து இதற்காக ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி இப்பிரச்னைக்காக தெற்கு ரயில்வே பொது மேலாளா், சென்னை கோட்ட மேலாளா் ஆகியோரிடம் நேரில் சென்று தடுப்புச் சுவரை அகற்ற வலியுறுத்தி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ரயில்வே ஊழியா்கள் சுவரை இடித்து பொதுமக்கள் செல்ல வழி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT