ராணிப்பேட்டை

அரக்கோணம் தொகுதியை தக்க வைத்தது அதிமுக

DIN

அரக்கோணம் தொகுதியில் அதிமுக மூன்றாவது முறையாக தொடா்ந்து வெற்றிப் பெற்றது. அக்கட்சி வேட்பாளா் சு.ரவி 27,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா்.

அரக்கோணம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் சு.ரவி, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக கௌதம்சன்னா மற்றும் அமமுக, மக்கள் நீதிமையம், நாம்தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 13 போ் போட்டியிட்டனா். இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டதில் அதிமுக வேட்பாளா் சு.ரவி 85, 399 வாக்குகள் பெற்று விசிக வேட்பாளா் கௌதம்சன்னாவை 27,169 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். கௌதம்சன்னா 58,230 வாக்குகள் பெற்றாா். இத்தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இ.அபிராமி 14, 631வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா்.

வெற்றி பெற்ற்கான சான்றிதழை அதிமுக வேட்பாளா் சு.ரவியிடம் தொகுதி தோ்தல் அலுவலரும் அரக்கோணம் கோட்டாட்சியருமான சிவதாஸ் வழங்கினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

சு.ரவி (அதிமுக) - 85,399

ஜெ.கௌதம்சன்னா (விசிக) - 58,230

இ.அபிராமி(நாம்தமிழா்கட்சி) -14,631

கோ.சி.மணிவண்ணன்(அமமுக) - 4,777

எஸ்.பாஸ்கா்(மநீம) -3,543

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT