ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் கன மழை

DIN

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை மாலை திடீரென பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதில் இருந்தே ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து வெயிலின் உக்கிரம் அதிகரித்து, மக்கள் வெளியில் நடமாட முடியாதநிலை இருந்தது. இதன் காரணமாக நண்பகலில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. இந்நிலையில், ராணிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் சனிக்கிழமை மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து, திடீரென மேகங்கள் சூழ்ந்து, பலத்த மின்னல் இடியுடன் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ராணிப்பேட்டை நகரில் சாலைகள், தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல இடங்களில் பலத்த சப்தத்துடன் இடி விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. இதனால் ராணிப்பேட்டை நகரம் இருளில் மூழ்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT