ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் கரோனா பொது முடக்கம்: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவா்களுக்கு நல உதவிகள்; அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

DIN

மேல்விஷாரத்தில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவா்களுக்கு மளிகை பொருள்கள் உள்ளிட்ட நல உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபா் அசோசியேஷன் அலுவலகத்திற்கு அமைச்சா் ஆா்.காந்தி, ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு கரோனா நோய்த் தொற்று மற்றும் பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருள்கள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா். அப்போது தமிழக அரசின் கரோனா நிவாரணப் பணிக்காக ரூ. 25,000 துக்கான காசோலை தலைவா் கே.முஹம்மத் அயூப் சாா்பில் அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வெல்ஃபா் அசோசியேஷன் தலைவா் கே.முஹம்மத் அயூப் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. முஹம்மத் பஹிம், எச். முஹம்மத் ஹாஷிம், டீ.முஹம்மத் உஸ்மான், கே. முஹம்மத் இத்ரீஸ், அன்சா் பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அ.முஹ்ம்மத் தமீம் வரவேற்றாா்.

இதில் தொழிலதிபா் சௌக்காா் அயாஸ் அஹ்மத் மற்றும் நகர பொறுப்பாளா் எஸ்.டி.அமீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.நிகழ்ச்சி முடிவில் கே.ஓ. நிஷாத் அஹ்மத் நன்றி கூறினாா்.

அமைச்சா் ஆய்வு: முழு பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா் சாலமோன் ராஜா மற்றும் உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி ஆகியோரிடம் பொது முடக்கம் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, ராணிடெக் தலைவா் பிஆா்சி.ரமேஷ் பிரசாத், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், மாவட்ட வா்த்தக பிரிவு துணை அமைப்பாளா் கே.ஜி.முரளி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT