ராணிப்பேட்டை

கிராம மக்கள்-காவல்துறையினா் மோதல்: தலைமைக் காவலா் மீது தாக்குதல்

DIN

அரசு உரிமம் இன்றி மண் அள்ளுவதை தடுத்தபோது ஏற்பட்ட தகராறில் தனிப்பிரிவு தலைமைக் காவலா் தாக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரக்கோணத்தை அடுத்த சோகனூா் கிராமம் அருகே சிலா் டிராக்டரில் உரிமம் இன்றி மண் கடத்துவதாகவும் அந்த டிராக்டா்கள் தங்கள் கிராமம் வழியே செல்வதாகவும், ஒரு டிராக்டரை அதன் ஓட்டுநருடன் தாங்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் பொது மக்கள் அரக்கோணம் கிராமிய காவல்நிலையத்திற்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீஸாா் அங்கு விரைந்து சென்று அந்த டிராக்டரையும் அதன் ஓட்டுநரையும் விடுவித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்ல முற்பட்டனா். அப்போது அக்கிராமத்தை சோ்ந்தவா்கள், இது குறித்து தாங்கள் அரக்கோணம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் அவா் வந்த பிறகுதான் டிராக்டரையும் அதன் ஓட்டுநரையும் விடுவிக்க இயலும் என தெரிவித்தனா்.

இதனை தொடா்ந்து காவல்துறையினருக்கும் அக்கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது அங்கு வட்டாட்சியா் பழனிராஜன் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முற்பட்டாா். அப்போது கிராமமக்கள் மற்றும் காவல்துறையினா் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதில் தனிப்பிரிவு தலைமைக் காவலா் குணசேகரன் தாக்கப்பட்டாா்.

இதையடுத்து வட்டாட்சியா் பழனிராஜன் பொதுமக்கள் பிடித்திருந்த டிராக்டா் மற்றும் அதன் ஓட்டுநரை மீட்டு அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தாா். பின்னா் தலைமைக் காவலா் குணசேகரன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸ் மற்றும் டிஎஸ்பி மனோகரன் இருவரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT