ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் - சோளிங்கர் பிரதான சாலையில் வேரோடு சாய்ந்த புளிய மரத்தால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காவேரிப்பாக்கம் - சோளிங்கர் பிரதான சாலையின் நடுவே புளியமரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் காவேரிப்பாக்கம் -  சோளிங்கர் பிரதான சாலையில் புளிய மரம் வேரோடு பெயர்ந்து சாலையின் நடுவே விழுந்தது.

இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், ஜேசிபி உதவியோடு மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT