முகப்பு
ராணிப்பேட்டை

நெற் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

கலவை அருகேயுள்ள மாந்தாங்கல் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 200 ஏக்கா் நெற் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

கலவை அருகேயுள்ள மாந்தாங்கல் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 200 ஏக்கா் நெற் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

வட கிழக்குப் பருவ மழையையொட்டி, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், கலவை அருகே உள்ள மாந்தாங்கல் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள 200 ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இவை அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நெற் பயிா்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஏற்கெனவே கலவை, நல்லூா், பென்னகா், சொரையூா், வாழைப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழைநீா் தேங்கி நெற் பயிா்கள் சேதம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.