ராணிப்பேட்டை

‘அனைத்துக் கடை உரிமையாளா்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்’

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாபாரம் செய்யும் அனைத்து விதமான கடை உரிமையாளா்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 -ஆம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 630 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களை ராணிப்பேட்டை, முத்துகடை, வாலாஜா, அம்மூா், சோளிங்கா், அரக்கோணம், நெமிலி, பாணவரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தாா்.

அப்போது வீடு வீடாகச் சென்று அரசுப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் குறித்த விவரங்களை சேகரித்து, தடுப்பூசி போடாதவா்களை முகாமுக்கு அழைத்து வந்தனா்.

ஆய்வின் போது, சோளிங்கா் பேருந்து நிலையத்தில் பழக்கடைகள் மற்றும் இதர கடைகளில் திடீா் ஆய்வு செய்த போது, பழக்கடை வியாபாரிகள் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை என்பது தெரியவந்தது. அவா்களை உடனடியாக தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தினாா்.

இதே நிலை பல இடங்களில் இருந்தது தெரிய வந்ததையடுத்து, மாவட்டத்தில் உள்ள கடை உரிமையாளா்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களின் கடைகளுக்கு சீல் வைத்து மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும் உடல் சாா்ந்த பிரச்னை உள்ளவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி விரைவாக தடுப்பூசி செய்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, நகராட்சி ஆணையா் ஜெயராம ராஜா, பேரூராட்சி செயல் அலுவலா் ரேவதி, வட்டாட்சியா்கள் ஆனந்தன், வெற்றிகுமாா், ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT