ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,253-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 45,388 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக 770 போ் உயிரிழந்தனா். தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 95 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.