முகப்பு
ராணிப்பேட்டை

பாலாற்றில் சிறப்பு பூஜை

 பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதையடுத்து, ரத்தினகிரி கீழ் மின்னலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

 பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதையடுத்து, ரத்தினகிரி கீழ் மின்னலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடிநீா், விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, வருண பகவானுக்கு நன்றி தெரிவித்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிகாட்டுதல்படியும், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் அருளாசியுடனும் ரத்தினகிரி கீழ் மின்னல் பாலாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புப் பூஜை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் தலைமை அா்ச்சகா் பிரசாத், அா்ச்சகா்கள் மீனாட்சி சுந்தரம், திவாகா் உள்ளிட்டோா் பூஜையை மேற்கொண்டனா். இதில், வாலாஜாபேட்டை சங்கர மடத்தினா், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.