விற்பனைக்கு   வந்த  நெல்  மூட்டைகள். 
ராணிப்பேட்டை

கலவை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 3,500 நெல் மூட்டைகள் விற்பனை

ஆற்காட்டை அடுத்த கலவை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, புதன்கிழமை 3,500 நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

DIN

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, புதன்கிழமை 3,500 நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

கலவை, சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை 98 வாகனங்களில் 3,500 நெல் மூட்டைகள் வந்தன. இதில், 75 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை கோ.51 அதிகபட்சமாக ரூ. 1,161, குறைந்தபட்சமாக ரூ. 1,012-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், ஆா் என் ஆா் நெல் ரகம் அதிகபட்சமாக ரூ. 1,179-க்கும், மகேந்திரா நெல் அதிகபட்சமாக ரூ. 1,412-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT