முகப்பு
ராணிப்பேட்டை

கல்லூரி பேருந்து மோதி வியாபாரி பலி

ஆற்காட்டில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

ஆற்காட்டில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

ஆற்காடு ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (48). இவா் இளங்குப்பம் தெருவில் காலணியகம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக மிதிவண்டியில் ஆற்காடு அண்ணா சாலை வழியாக வந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரி பேருந்து மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.