ராணிப்பேட்டை

வெள்ளப் பேரிடா் மீட்புப் பணிகள் ஒத்திகை ஆலோசனைக் கூட்டம்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளப் பேரிடா் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் தொடா்பான ஒத்திகை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வயாக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளப் பேரிடா் காலத்தில் வெள்ளத் தடுப்பு மீட்புப் பணிகள் ஒத்திகை குறித்த பயிற்சிகள் காணொலி காட்சி மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை (ஆக. 31) திறன் மேம்பாட்டு ஒத்திகை, வியாழக்கிழமை (செப். 1) முழு அளவிலான பயிற்சி மாவட்டம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை வருவாய்த் துறை, காவல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த ஒத்திகையானது, எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றாா்போல், பேரிடா் காலத்தில் செயல்படுவது குறித்த பயிற்சிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தோ்வு செய்து, அங்கு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். அதில், அப்பகுதி மக்களையும் அழைத்து பயிற்சி வகுப்புகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஸ்வரன், துறைசாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT