ராணிப்பேட்டை

அரசுப் பள்ளியில் பசுமைத் திருவிழா

DIN

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பசுமைத் திருவிழாவில் மாணவா்கள் 100 மரக்கன்றுகளை வியாழக்கிழமை நட்டனா்.

ராணிபபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நஅயஉ உஅதபஏ ஊஞத சஉலப எஉசஉதஅபஐஞச என்ற சிங்கப்பூா் வாழ் தமிழ் அமைப்பு மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து பள்ளி மாணவா்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரங்களின் மகத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக பசுமைத் திருவிழா என்ற பெயரில் மரம் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மருத்துவப் பயன் மிகுந்த 100 எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் நட்டனா்.

அப்போது மரங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள்பற்றி பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் சிறப்புரையாற்றினாா். மேலும்ஆற்காடு தோப்புகானா (வடக்கு) அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரமேஷ் பாபு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரங்களின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.

விழாவை சாத்தூா் உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சுதா்சன் பாபு ஒருங்கிணைத்தாா். இதில், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் மனோகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பிரபு, பள்ளியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் சேரன், பள்ளி உடற்கல்வி ஆசிரியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT