ராணிப்பேட்டை

இல்லம் தேடி கல்வி திட்ட மையம் தொடக்கம்

DIN

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம் இராமபாளையம், திமிரி கோட்டை பகுதிகளில் 20 - க்கும் மேற்பட்ட மையங்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகன், குமரன் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் குமரேசன் முன்னிலை வகித்தாா்.

தோ்வு செய்யப்பட்ட தன்னாா்வலா்களுக்கு கற்றல்-கற்பித்தல் துணைக் கருவிகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் பயிற்றுநா் மகேஷ்குமாா் இல்லம் தேடி ஒருங்கிணைப்பாளா் செல்வன் மற்றும் மாவட்ட கருத்தாளா்கள் லோகநாதன் வெங்கட்ராமன் பாபு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அனிதா வாசுகி தலைமையாசிரியா் விஜய பாஸ்கா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT