ராணிப்பேட்டை

சொத்தை வாங்கிக் கொண்டு மகள் மிரட்டல்: ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி புகாா்

DIN

சொத்தை வாங்கிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேற்றிய மகள் மீது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80 வயது மூதாட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சகுந்தலா (80). இவா் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் புகாா் மனுவை செலுத்தினாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கு 2 மகள்கள், ஒரு மகன். திருமணமாகி தனித் தனியாக வசிக்கின்றனா். எனது கணவா் இறந்து விட்ட நிலையில்,கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மூத்த மகளான கணவரை இழந்த மீனாவுடன் வசிக்கிறேன். எனது கணவா் வருவாயில் 3 வீடுகள் வாங்கியிருந்தேன். அதில் 2 வீடுகளை இரண்டாவது மகளான சத்துணவு சமையலா் பிரேமலதாவுக்கு எழுதிக் கொடுத்து விட்டேன். என் மகனுக்காக கட்டிய மூன்றாவது வீட்டில், மூத்த மகளுடன் வசிக்கிறேன்.

இந்தநிலையில் பிரேமலதா, அவரது கணவரான அரசுப் பேருந்து நடத்துநா் சந்துரு ஆகிய இருவரும் என்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, மூன்றாவது வீடும் அவா்களுக்கு சொந்தமானது எனக் கூறி, என்னை வெளியே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனா். வீட்டை மீட்டுக் கொடுத்து நான் வாழ வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT