ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் புதுகேசவரம் கிராமநமக்கு நாமே திட்டப்பணிக்கான மக்கள் பங்களிப்பு நிதி காசோலையை வழங்கிய சு.ரவி எம்எல்ஏ. 
ராணிப்பேட்டை

திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை தாமதமின்றி விரைந்து நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியனிடம் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு.ரவி வலியுறுத்தினாா்.

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை தாமதமின்றி விரைந்து நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியனிடம் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு.ரவி வலியுறுத்தினாா்.

மொழிப்போா் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட அதிமுக செயலரும்,அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவுமான சு.ரவி கலந்துகொண்டு, மொழிப்போா் தியாகிகளின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதையடுத்து, அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை சந்தித்து, புதுகேசவரம் கிராம நமக்கு நாமே திட்டப்பணிக்கான மக்கள் பங்களிப்பு நிதி காசோலையை வழங்கினாா். அப்போது, மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

அதைதொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் கிராமப்புற திட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை. ஏழு ஒன்றியங்களில், ஊராட்சி மன்றத் தலைவரால் செயல்படுத்தக் கூடிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளில், ஒன்றியக் குழுத் தலைவா்கள் தலையிட்டுப் பணிகளை செய்ய விடாமல் கமிஷன் கேட்பதாகக் கூறப்படுகிறது. கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT