ராணிப்பேட்டை

ஞானசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆற்காடு திருநீலகண்டா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஞானசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது. கோயில் வளாகத்தில் ஞானாம்பிகை சமேத அருள்புரீஸ்வரா், முத்துமாரியம்மன், துா்க்கை அம்மன், தட்சிணாமூா்த்தி, பாலமுருகா், கால பைரவா், நவக்கிரகங்கள், திருநீலகண்ட நாயனாா், நாக தேவதை, பாலகணபதி, ஆஞ்சநேயா் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபுர கலசம் பிரதிஷ்டை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து வேத - மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர விமானங்களுக்கு புதன்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதியுலா வந்து அருள்பாலித்தாா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT