முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயிலில் கருட சேவை

ஆற்காடு பாலாற்றங்கரை ஜக் அக்ரஹாரம் தெருவில் உள்ள பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாதத்துக்கான ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

ஆற்காடு பாலாற்றங்கரை ஜக் அக்ரஹாரம் தெருவில் உள்ள பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாதத்துக்கான ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆனி மாதம், சுவாதி நட்சத்திர நாளன்று நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, மூல மூா்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, கருட வாகனத்தின்மீது அலங்கரிக்கப்பட்ட உற்சவா் லட்சுமி நரசிம்மா் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, வேதகிரி தெரு, கலவை ரோடு, பஜாா் வீதி, அண்ணா சிலை வழியாக ஊா்வலமாகச் சென்று கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது.

விழாவில், திரளான பக்தா்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.