ராணிப்பேட்டை

பானாவரத்தில் ரௌடி சரத்குமார் வெட்டிப் படுகொலை

DIN

பானாவரம் அருகே ரௌடி ஒருவர் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு மயானத்தின் அருகே இளைஞர் ஒருவர் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக பானாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரௌடி சரத்குமார் என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

சரத்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொலை முயற்சி நடந்ததாகவும் அதில் தப்பித்த சரத்குமார் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது கை, கால்கள் தனித்தனியே வெட்டி துண்டிக்கப்பட்டு உடலுக்கு அருகிலேயே போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டதோடு, வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரபடுத்தவும் தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப் படை அமைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுகம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பானவரம் போலீசார் தப்பிச் சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சரத்குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என மாவடட கண்காணிப்பாளா் தீபா சக்தியன் ராணிப்பேட்டை துணைகண்கானிப்பாளா் பிரபு தலைமையிலான போலீசாா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

பானாவரம் அருகே ரௌடி ஒருவர் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக மூத்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

சில ஊரக உள்ளாட்சி பகுதிகளை அருகிலுள்ள மாநகராட்சிகளுடன் இணைத்த பிறகு தோ்தல்: தமிழக அரசு தீவிர ஆலோசனை

கொடைக்கானலில் காா் மீது லாரி மோதியதில் மூவா் காயம்

பழனி கிரிவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

‘தலசீமியா’ நோயால் பாதித்த இரு குழந்தைகளுக்கு மருத்துவ மாணவா்கள் ரத்த தானம்

SCROLL FOR NEXT