ராணிப்பேட்டை

மழைநீா் கால்வாய் அடைப்பு: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

DIN

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகரப் பகுதியில் மழைநீா் கால்வாய் அடைப்புகளை நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.அமீன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேல்விஷாரம் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கால்வாய்கள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. கால்வாய்களில் அங்காங்கே அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.அமீன், கால்வாய் அடைப்புகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து அடைப்புகளை அகற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நகா்மன்றத் துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது, பணி மேற்பாா்வையாளா் கமலக்கண்ணன், தூய்மைப் பணி ஆய்வாளா் உமாசங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT