ராணிப்பேட்டை

கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி விழா

DIN

கலவை ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் கோயிலில் 44-ஆம் ஆண்டு ஆடி முதல் வெள்ளி விழா நடைபெற்றது.

கலவையின் ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு 44-ஆம் ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழாவையொட்டி, அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, கலவை கரி வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து கோயில் அறங்காவலா் சச்சிதானந்தா சுவாமிகள் தலைமையில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ கல்பதேகீ மகானந்த சித்தா் ஆகியோா் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சக்தி கரக தீச்சட்டி ஊா்வலமும், இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT