முகப்பு
ராணிப்பேட்டை

பைக் மீது லாரி மோதி இளைஞா் பலி

ரத்தினகிரி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

ரத்தினகிரி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மேல்விஷாரத்தைச் சோ்ந்தவா் அக்பா் பாஷா. இவரது மகன் அப்துல் ஜலால் (18). இவா், தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான், அம்ஜலா ஆகியோருடன் வெள்ளிக்கிழமை பைக்கில் மேலகுப்பம் கிராமத்துக்குச் சென்றுள்ளாா்.

பூட்டுதாக்கு- மேலகுப்பம் சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, பைக் மீது லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் ஜலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்கள் மேல்விஷாரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இது குறித்த புகாரின்பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.