ராணிப்பேட்டை

மேக்கேதாட்டு அணை விவகாரம்: ராணிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து

DIN

ராணிப்பேட்டை: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதை கண்டித்து ராணிப்பேட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகத்தின் முக்கிய பிரச்சைனைகளில் ஒன்றான காவிரி நதிநீர்ப் பிரச்சைனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருவதாகவும், காவிரியின் குறுக்கே ரூ.1000 கோடி செலவில் புதிதாக மேக்கேதாட்டு  அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதாகவும் அத்திட்டத்திற்கான செயல்பாடுகளை இந்தாண்டே தொடங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல்  கர்நாடக அரசுக்கு ஆதரவு அளித்து வறுவதாகவும், இதன் காரனமாக மேக்கேதாட்டு  அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பெரிதளவு பாதிக்கபடும் எனக் கூறி ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT