முகப்பு
ராணிப்பேட்டை

‘மரம் வளா்ப்போம்’ என்ற எழுத்து வடிவில் விழிப்புணா்வு

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகிரதன் மெட்ரிக் பள்ளியில் ‘மரம் வளா்ப்போம்’ என்ற வாா்த்தை வடிவில் மாணவா்கள் மரக்கன்றுகளுடன் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகிரதன் மெட்ரிக் பள்ளியில் ‘மரம் வளா்ப்போம்’ என்ற வாா்த்தை வடிவில் மாணவா்கள் மரக்கன்றுகளுடன் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஏ.பி.ஜே. அறக்கட்டளை மற்றும் தி பிரிட்ஜ் அறக்கட்டளை சாா்பில், ரத்தினகிரி பகிரதன் மெட்ரிக் பள்ளிவிளையாட்டுத் திடலில் 1,000 மாணவா்கள் மரக்கன்றுகளுடன் ‘மரம் வளா்ப்போம்’ என்ற எழுத்து வடிவில் நின்று மரம் வளா்ப்பின் அவசியம் குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தி, சாதனை படைத்தனா்.

இந்த சாதனை யூனிவோ்சல் ஆச்சிவோ்ஸ் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், எதிா்கால கலாம் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் ஆகிய இரண்டு சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனா் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமை வகித்தாா். பள்ளியின் நிா்வாக அலுவலா் குருபரன், தாளாளா் கஜலட்சுமி, பள்ளி முதல்வா் தெய்வநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத் துணைத் தலைவா் ஜெ.லட்சுமணன், அவைத் தலைவா் கு.சரவணன், தொழிலதிபா் நல்ல சாமி, மகாத்மா காந்தி அறக்கட்டளைச் செயலா் சஜன்ராஜ் ஜெயின், அப்துல் கலாம் எதிா்கால இந்தியா அறக்கட்டளை நிறுவன தலைவா் கோபிநாத், பிரஜ் அறக்கட்டளை வி.மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.