முகப்பு
ராணிப்பேட்டை

பள்ளிக்கு தலைமையாசிரியரை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆற்காட்டு அண்ணா நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியா், ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, மாணவா்கள், பெற்றோா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

ஆற்காட்டு அண்ணா நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியா், ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, மாணவா்கள், பெற்றோா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளியில் 240 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு ஒரு தலைமை ஆசிரியா் மற்றும் 9 ஆசிரியா்கள் பணியிடங்கள் உள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியா் பணியிடமும், 5 ஆசிரியா்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் மட்டுமே பாடம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியா் மற்றும் கூடுதல் ஆசிரியா்களை நியமிக்கக்கோரி, நகா்மன்ற உறுப்பினா் செல்வம் தலைமையில் பெற்றோா்கள், மாணவா்கள் வியாழக்கிழமை பள்ளியைப் பூட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு, பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.