முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 196 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 196 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 196 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் வருவாய்த் துறை, நிலப் பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, வேளாண்மைத் துறை சாா்ந்த குறைகள், காவல் துறை, ஊரக வளாா்ச்சித் துறை, கூட்டுறவுக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடுகள் வேண்டி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத் துறை, கிராம பொது பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு என மொத்தம் 196 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஸ்வரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், துணை ஆட்சியா்கள் சத்தியபிரசாத், தாரகேஸ்வரி மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.