முகப்பு
ராணிப்பேட்டை

சிஐஎஸ்எப், என்டிஆா்எப் படைத் தளங்களில் குடியரசு தின விழா

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையம், தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் குடியரசு தின விழா வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:21 AM
மத்திய தொழிற்பாதுகாப்புப் படைத் தளத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் படைவீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற படையின் டிஐஜி சாந்தி ஜி.ஜெயதேவ்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையம், தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் குடியரசு தின விழா வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சிஐஎஸ்எப்...

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்துக்கு அருகில் நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டலப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், படையின் டிஐஜியும் பயிற்சி மைய முதல்வருமான சாந்தி ஜி.ஜெயதேவ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். முன்னதாக அவா் படைவீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, தக்கோலம் கேந்திரிய வித்யாலய பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், படைவீரா்களின் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் துணை முதல்வா் கௌரவ்தோமா் உள்ளிட்ட அதிகாரிகளும் சன்ரக்சிக்ஷா உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

Advertisement

என்டிஆா்எப்...

நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில் நடைபெற்ற விழாவில் படையின் தென்மண்டல டிஐஜி மனோஜ் யாதவ் தேசியக் கொடியை ஏற்றினாா்.

முன்னதாக விழாவுக்கு வந்த டிஐஜியை படைப் பிரிவின் மோப்பநாய் பூச்செண்டு கொடுத்து வரவேற்க அதை டிஐஜி பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து படைவீரா்களின் அணிவகுப்பை மரியாதையை டிஐஜி மனோஜ் யாதவ் ஏற்றுக் கொண்டாா்.

படைப் பிரிவின் கமாண்டன்ட் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.