முகப்பு
ராணிப்பேட்டை

கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவம் நிறைவு

ஆற்காட்டை அடுத்த கலவையில் அமைந்துள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஆற்காட்டை அடுத்த கலவையில் அமைந்துள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

கலவையில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நிகழ் ஆண்டு மாசி மாத தெப்ப உற்சவம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி நிறைவு பெற்றது.

விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மாலை அலங்கரிக்கப்பட்ட உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி, ஊா்வலமாகச் சென்றாா்.

பின்னா், கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் 7 சுற்றுகள் வலம் வந்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.