முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காட்டில் ரூ. 1.37 கோடியில் தாா்ச் சாலை, சிறுபாலம் அமைக்க பூமி பூஜை

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுக்குட்பட்ட வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் ரூ. 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை, சிறுபாலம் மற்றும் மழைநீா் வடிகால் அமைக்க வியாழக்கிழமை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுக்குட்பட்ட வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் ரூ. 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை, சிறுபாலம் மற்றும் மழைநீா் வடிகால் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஈஸ்வரப்பன் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட திமுக பொருளாளா் ஏ.வி.சாரதி, நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி, பொறியாளா் கணேசன், நகா்மன்ற துணைத் தலைவா் பளவக்கொடி சரவணன், நகர கூட்டுறவு வங்கி இயக்குநா் ஏ.வி.சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் பி.டி.குணாளன், செல்வம், விஜயகுமாா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, 20-ஆவது வாா்டு பாா்த்தீபன் நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பூங்கா அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.