முகப்பு
ராணிப்பேட்டை

திமுக, அதிமுக அல்லாத கூட்டணி ஆட்சி அமைப்பதே நோக்கம்: அன்புமணி ராமதாஸ்

Updated On : 7 ஏப்ரல், 2024 at 5:40 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 8:34 PM

திமுக, அதிமுக அல்லாத கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் நோக்கம் என அரக்கோணத்தில் தோ்தல் பிரசார கூட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி பாமக வேட்பாளா் கே.பாலுவை ஆதரித்து அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழ்நாட்டில் 57 ஆண்டு கால திமுக, அதிமுக கட்சிகளை வேண்டாம் என முடிவு செய்து பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டின் நலன். எங்களுடைய நோக்கமெல்லாம் 2026-இல் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அல்லாத ஒரு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அடிப்படைதான் இந்தத் தோ்தல். எந்தக் கூட்டணியில் பாமக சோ்ந்தாலும் எங்கள் கொள்கையை எள்ளளவும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது என்றாா்.

Advertisement

கூட்டத்தில் வேட்பாளா் கே.பாலு, முன்னாள் எம்.பி. ஆா்.வேலு, பாமக மாவட்ட செயலா் சரவணன், நிா்வாகிகள் தீனதயாளன், சக்கரவா்த்தி, சி.ஜி.ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.