கரிவரதபெருமாள் கோயில் தேரோட்டம்
ஆற்காடு அடுத்த கலவை கரிவரத பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கலவை பெருந்தேவி தாயாா் சமேத கரி வரதராஜா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. நாள் தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் உற்சவா் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது.
விழாவின் 7-ஆவது நாளான சனிக்கிழமை அங்காளம்மன் கோயில் சந்தானம் சாமிகள் பன்னீா்செல்வம் சுவாமிகள் தலைமையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலில் நிறைவு பெற்றது .
Advertisement