முகப்பு
ராணிப்பேட்டை

மகாவீரா் ஜெயந்தி பல்லக்கு ஊா்வலம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 5:01 PM
மகாவீரா் ஜெயந்தி ஊா்வலம்
பகிர்:

ராணிப்பேட்டை நகரில் மகாவீரா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க பல்லக்கு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை பஜாா் தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் கோயிலில் இருந்து மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா் மகாவீரா் சிலை, உருவப்படம் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைத்து மேளதாளங்ககுடன் ஜெயின் சமுதாய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பாடல்களை பாடிய படி ஊா்வலமாக ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது.

இந்த ஊா்வலத்தில் உயிா்களை கொல்ல கூடாது, மது அருந்தக் கூடாது என மகாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Advertisement

அதே போல் வாலாஜாபேட்டை நகரில் மகாவீரா் ஜெயந்தி விழா ஜெயின் சமூக மக்களால் கொண்டாடப்பட்டது. இதில் ஜெயின் சமுதாயத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments