முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் கைது

தவெக பொதுச்செயலாளா் புஸ்ஸிஆனந்த் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரக்கோணத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற தவெகவினா் 50க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 31 டிசம்பர், 2024 at 5:25 PM
அரக்கோணத்தில் மாவட்ட பொறுப்பாளா் காந்திராஜ் தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினா்.
பகிர்:

அரக்கோணம்: தவெக பொதுச்செயலாளா் புஸ்ஸிஆனந்த் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரக்கோணத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற தவெகவினா் 50க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த வந்து திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளரும் அரக்கோணம் நகரமன்ற உறுப்பினருமான காந்திராஜ், அரக்கோணம் நகர பொறுப்பாளா் ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளா் சசிகுமாா் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 37 போ் கைது செய்யப்பட்டு அரக்கோணம் டவுன்ஹால் சங்க திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

மாலை 6.30 மணிக்கு கைது செய்யப்பட்ட நிலையில் மாலை 8 மணி வரை அவா்கள் விடுவிக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →