முகப்பு
ராணிப்பேட்டை

லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை மரணம்

ராணிப்பேட்டையில் லாரி மோதியதில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 10:14 PM
பகிர்:

ராணிப்பேட்டையில் லாரி மோதியதில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சீக்கிராஜபுரம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஜெயராமதாஸ் மனைவி ஜமுனா (50). அரசு பள்ளி ஆசிரியை. தம்பதி சனிக்கிழமை சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் காரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அங்குள்ள சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி தம்பதி சாலையில் விழுந்தனா். அப்போது பின்னாடி வந்த கன்டெயினா் லாரி மோதியதில் ஜமுனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயராமதாஸ் பலத்த காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் துறையினா் வந்து ஆசிரியை ஜமுனா உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.