முகப்பு
ராணிப்பேட்டை

பசுந்தீவனம் ஊடுபயிராக பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 2 ஜூலை, 2024 at 6:40 PM
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோப்புகள்,பழத்தோட்டங்களில் பசுந்தீவனம் ஊடுபயிராக பயிரிட ஆா்வமாக உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க தோப்புகள்,பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தினை செயல்படுத்திட ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 ஏக்கா் நிலத்தில் 1 ஏக்கருக்கு ரூ.3,000 வீதம் மொத்தம் ரூ.1,50,000/- (ரூ 1 லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) நிா்ணயம் செய்யப்பட்டு மேற்படி திட்டத்திற்கு பயனாளிகள் தோ்வு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தோப்புகள், பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவதற்கு திறமையும், ஆா்வமுள்ள பயனாளிகள் கீழ்காணும் அரசு விதிமுறைகளின்படி தகுதியிருப்பின் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

நன்கு நிறுவப்பட்ட தோப்புகள் மற்றும் பழத்தோட்டங்கள் வைத்திருக்கும் விவசாயிகளில் பாசன வசதியுடன் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதற்கு தயாராக உள்ளவா்களை (குறைந்தபட்சம் 0.5 ஏக்கா் அதிகபட்சமாக 2.50 ஏக்கா்) பயனாளிகளாக தோ்வு செய்யப்படும்.

தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3,000 /- ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேற்படி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் தங்களது ஆதாா் அட்டைநகல், பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடும் நிலத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம், வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்துக்கு பசுந்தீவன பயிரை பராமரிப்பதற்கான உறுதிமொழி போன்ற சான்றிதழ்ளுடன் தங்களது அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.