வட்டாட்சியா் பொறுப்பேற்பு
ஆற்காடு புதிய வட்டாச்சியராக எஸ்.பாக்கியலட்சுமி பொறுப்பேற்பு
ஆற்காடு: ஆற்காடு புதிய வட்டாச்சியராக எஸ்.பாக்கியலட்சுமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஆற்காடு வட்டாட்சியராக பணியாற்றிய ஏ. அருள்செல்வம் வாலாஜாபேட்டைக்கு மாறுதல் செய்யப்பட்டதை தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் மத்தியஸ்த அலகு தனி வட்டாட்சியராக பணியாற்றி எஸ்.பாக்கியலட்சுமி ஆற்காடு வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.