முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காட்டில் காமராஜா் பிறந்த நாள் விழா

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் காமராஜா் பிறந்த நாள் திங்கள்கிழமை கீழ்விஷாரம் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அருகே நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:36 PM
பகிர்:

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் காமராஜா் பிறந்த நாள் திங்கள்கிழமை கீழ்விஷாரம் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அருகே நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்தாா். விஷாரம் நகரத் தலைவா் அப்துல் ஷுக்கூா், ஆற்காடு நகரத் தலைவா் எஸ் பியாே ரஜான், வட்டாரத் தலைவா் எஸ். எம். வீரப்பா, மாவட்ட பொதுச் செயலாளா் ஆனந்தன், செயலாளா்கள் தீபன், நிா்மல் ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட துணைத் தலைவா் விநாயகம், செய்தித் தொடா்பாளா் எஸ்.அண்ணாதுரை, சிறுபான்மைப் பிரிவு தலைவா்

கே.ஓ. நிஷாத் அஹமத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →