முகப்பு
ராணிப்பேட்டை

நாளை திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு

Updated On : 9 ஜூன், 2024 at 6:57 PM
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) காலை 11 மணிக்கு, மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆா். காந்தி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு..

வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், அவைத்தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில், சிப்காட் பாரதி நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே இக்கூட்டத்தில் மாவட்ட திமுக நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள், பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளா்கள் உள்ளிட்டோா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இதில் கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா, தோ்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளாா்.