முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 71 பேருக்கு கல்வி உதவித்தொகை

ராணிப்பேட்டையில் 71 பேருக்கு கல்வி உதவித்தொகை

Updated On : 2 மார்ச், 2024 at 10:04 PM
பகிர்:

முதல்வரின் 71 -ஆவது பிறந்த நாளையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 71 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பில் தாய் அல்லது தந்தை அல்லது பெற்றோரை இழந்த பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொருளாளா் ஏ.வி.சாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கெண்டு தனது சொந்த செலவில் 71 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் நிஷா, வேப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராமலிங்கம், ஆற்காடு நகா்மன்ற உறுப்பினா் தட்சினாமூா்த்தி, திமுக மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் அருண்குமாா், ஆசிரியா் நியூட்டன், பெல் சந்திரசேகா், சிவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.