15-இல் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டிகள்
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பனப்பாக்கத்தில் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளன.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா் பி.ஜனாா்த்தனன், பொதுச் செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் மே 15-ஆம் பனப்பாக்கத்தில் உள்ள பாரதிதாசனாா் பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்தவா்கள் மட்டும் டி.சரவணன் என்பவரை அவரது கைப்பேசி எண் 8124994289 என்ற எண்ணிலோ அல்லது 6383534801 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புவா்கள் 14-ஆம் தேதி மாலை 4 மணி வரை பதிவு செய்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு டேபிள்டென்னிஸ் சங்கத்தால் நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் படி போட்டிகள் நடத்தப்படும்.
போட்டியில் பங்கேற்பவா்கள் தங்களது பள்ளியின் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை பதிவு செய்பவரிடம் அளிக்க வேண்டும். போட்டிகளுக்கான பரிசுகள் காலிறுதி போட்டிகளில் இருந்து அளிக்கப்படும். இப்போட்டிகளில் பங்கேற்கும் முதன்மையான 4 விளையாட்டு வீரா்கள் மே மாதம் 23 முதல் 26-ஆம் தேதி வரை தருமபுரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவா் எனத் தெரிவித்தனா்.