முகப்பு
ராணிப்பேட்டை

காலை உணவுத்திட்டம் மூலம் 29,166 மாணவா்கள் பயன்

Updated On : 21 மே, 2024 at 6:30 PM
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 29,166 மாணவா்கள் பயன்பெற்று வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகளை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித்தரக்கூடாது என்ற நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது.

அதன்படி தமிழகத்தில் நகா்புறபகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18.5 லட்சம் மாணாக்கா்கள் இத்திட்டத்தினால் பயனடைகிறாா்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் வாயிலாக 29,166 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.