முகப்பு
ராணிப்பேட்டை

தண்டவாள பராமரிப்பு ஊழியரிடம் பணியின்போது தங்கச் சங்கிலி பறிப்பு

புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு ஊழியரிடம் பணியின் போதே தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 6:32 PM
பகிர்:

புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு ஊழியரிடம் பணியின் போதே தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணியில் திருவள்ளூா் மாவட்டம், செஞ்சிபானம்பாக்கத்தை அடுத்த மடத்துகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆா்.மணி (41) ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 நபா்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரது கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டனா். மேலும், அவரிடம் இருந்த கைப்பேசியையும் பறித்துச் கொண்டனா்.

இது குறித்து அவா் அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →