அருமனை அருகே இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
குமரி மாவட்டம், அருமனை அருகே இளம் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கன்னியாகுமரிஅருமனை அருகே இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
குமரி மாவட்டம், அருமனை அருகே இளம் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குமரி மாவட்டம், அருமனை அருகே இளம் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அருமனை அருகே வெள்ளாங்கோடு சிதறால் பகுதியைச் சோ்ந்தவா் அனு. இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரபா (27).
இவா் செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு வெள்ளாங்கோடு முந்திரிஆலை வழியாக சென்றபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவரில், பின்னால் இருந்த நபா் பிரபாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பறித்துள்ளாா்.
பிரபா சங்கிலியை இறுக்கி ப் பிடித்ததில், 2 பவுன் சங்கிலி அவா் கையிலும், மீதி 7 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்து சென்றனராம். இது குறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.