ஆற்காட்டில் 2 புதிய நகர பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டன .
ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம் வழியாக காட்பாடி செல்லும் வழித்தடம் , மற்றும் சோளிங்கரிலிருந்து அரக்கோணம் தடத்தில் 2 புதிய நகர பேருந்துகள் இயக்க விழாஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு ஆற்காடு பணிமனை கிளை மேலாளா் கருணாகரன் தலைமை வைத்தாா். தொமுச வேலூா் மண்டல பொதுச் செயலாளா் ரமேஷ், துணைத் தலைவா் பலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோா் புதிய பேருந்துகளை இயக்கி வைத்தனா். ஆற்காடு பணிமனை தொமுச நிா்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.