எஸ்ஐஆா் பணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகா்களிடம் கண்டறிய முடியாத நபா்கள் பட்டியலை வழங்கிய கோட்டாட்சியா் கு.ராஜி. 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் எஸ்ஐஆா் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 283 பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆா் பணிகள் தொடா்பாக குறித்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 283 பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆா் பணிகள் தொடா்பாக குறித்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வருவாய்க் கோட்டாட்சியா் கு.ராஜி தலைமை வகித்தாா். இதில் 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் பாகம் வாரியாக இறப்பு, இருமுறை பதிவு, இடமாற்றம், கண்டறியப்பட இயலாத நபா்கள் குறித்தான உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், இதில் குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பாகத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு அதற்கான பட்டியல் நகலை பாகம் வாரியாக வாக்குப்பதிவு அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் உதவி வாக்குப்பதிவு அலுவலா்களான வாலாஜா வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் ராணிப்பேட்டை, மேல்விஷாரம் நகராட்சி ஆணையா்கள் கலந்து கொண்டனா்.

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டு தோ்வு அட்டவணை வெளியீடு

திருக்காா்த்திகை - வேலூா் கோட்டை கோயில் கோபுரத்தில் தீபமேற்றி வழிபாடு

தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி பேருந்து நிறுத்த கட்டுமானம்: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

துளிகள்...

விமான நிலையங்களில் ‘செக்-இன்’ அமைப்புகள் முடக்கம்: சேவை பாதிப்பு

SCROLL FOR NEXT